Posts

மனிதன் மீது சக மனிதன் சிறுநீர் கழித்த அவலம் - மத்திய பிரதேசம், இந்தியா

Image
மத்திய பிரதேச மாநிலம் சித்தி தொகுதியின் பாஜக எம்எல்ஏ கேதார் நாத் சுக்லாவின் பிரதிநிதியான பிரவேஷ் சுக்லா என்பவர் மதுபோதையில், மனநலம் பாதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்துள்ளார் வாயில் சிகரெட்டை பிடித்துக்கொண்டு தரையில் அமர்ந்திருந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த நபர் மீது மதுபோதையில் சிறுநீர் கழிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்ததுள்ளது. சிறுநீர் கழித்த நபர் பாஜக எம்எல்ஏவின் பிரதிநிதி என்பதால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் பயத்தில் போலீசில் புகார் அளிக்காமல் இருந்துள்ளனர். வீடியோ வைரலான நிலையில் தற்போது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அரசு நடவடிக்கை: 1. குற்றம் சாட்டப்பட்ட பிரவேஷ் சுக்லா மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் (என்எஸ்ஏ) பாயும் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார். 2. பிரவேஷ் சுக்லா மீது சித்தியில் உள்ள உள்ளூர் போலீசார் அவருக்கு எதிராக ஐபிசி பிரிவு 294 மற்றும் 504 மற்றும் எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் எஃப்ஐஆர் பதிவு